முதியோர் உதவித்தொகை பெற அடையாள அட்டை வழங்கல்
புதுச்சேரி: ராஜ்பவன் தொகுதியில் முதியோர் உதவித்தொகை பெற அடையாள அட்டையை அமைச்சர் லட்சுமிநாராயணன் வழங்கினார்.புதுச்சேரி, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் மூலம் ராஜ்பவன் தொகுதியை சேர்ந்த முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டவர், முதிர்கன்னிகள் ஆகியோர் மாதந்திர உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டை வழங்கும் விழா நேற்று நடந்தது.குருசுகுப்பம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில், அமைச்சர் லட்சுமிநாராயணன் 138 பயனாளிகளுக்கு உதவித்தொகைக்கானஅடையாள அட்டையை வழங்கினார்.இதில், துறை அதிகாரிகள், தொகுதி என்.ஆர்.காங்., பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.