உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  போலீசார் சட்டம் ஒழுங்கை பாதுகாத்தால் அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும் : முதல்வர்

 போலீசார் சட்டம் ஒழுங்கை பாதுகாத்தால் அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும் : முதல்வர்

புதுச்சேரி: போலீஸ் துறையில் புதிய பணியிடங்கள் உருவாக்க மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். போலீஸ் மாநாட்டை துவக்கி வைத்து அவர், பேசியதாவது: போலீசார் சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். புதிய தொழில் நுட்பங்களுக்கு ஏற்ப குற்றங்கள் வளர்ந்து வருகிறது. அதற்கேற்ப போலீசார் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். இந்திய அளவில், பாகூர் போலீஸ் ஸ்டேஷன் 8ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதுபோல் அனைத்து போலீஸ் ஸ்டேஷன்கள் வர வேண்டும். இது சிறிய மாநிலம். இங்கு அனைத்தும் சாத்தியம். 6 மாதங்களுக்கு ஒரு முறை போலீசாருக்கு பயிற்சி அளிக்க வேண்டும். ஊர்க்காவல் படை வீரர் தேர்வில் குழப்பம் உள்ளது. அதை சரி செய்து தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் பணி வழங்கப்படும். மத்திய அரசிடம் புதிய பணியிடங்கள் உருவாக்க அனுமதி கோரியுள்ளோம். போலீசார் திறம்பட பணியாற்றி, சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருந்தால் அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும். அரசு எப்போதும் போலீஸ் துறைக்கு ஒத்துழைப்பு அளிக்கும். தாராளமாக நிதியும் வழங்கும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ