உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மத்திய அரசின் நிதி இல்லை என்றால் வரியை உயர்த்த நேரிடும்: முதல்வர்

மத்திய அரசின் நிதி இல்லை என்றால் வரியை உயர்த்த நேரிடும்: முதல்வர்

புதுச்சேரி : மாநிலத்தில் இதுவரை 5 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.தாவரவியல் பூங்காவில் நேற்று நடந்த விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:கூட்டுறவு சங்கங்கள் விவசாய உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு பால் உற்பத்தி சங்கங்கள் விவசாயிகளுக்கு கறவை மாடுகளை வாங்கி கொடுத்து, பால் உற்பத்தியை பெருக்க வேண்டும். வேளாண் பயிற்சி முடித்த இளைஞர்கள் கறவை மாடுகளை வாங்கி, பால் பண்ணை வைத்தால் நல்ல வருமானம் கிடைக்கும்.சுய உதவி குழுக்கள் மற்றும் படித்த பெண்கள் தொழில் துவங்க முன்வர வேண்டும். இது போன்று பல்வேறு திட்டங்கள் மூலம் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த அரசு கவனம் செலுத்தி வருகிறது.மாநிலத்தில் அனைத்து திட்டங்களும் மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் நிதி இல்லை என்றால், வரியை அதிகப்படுத்த நேரிடும். எந்த குறையுமின்றி, அனைவரும் பாராட்டும்படி வெள்ளை அரிசி வழங்கப்பட்டு வருகிறது.மேலும், 2 கிலோ கோதுமை வழங்கப்படவுள்ளது. இதுவரையில் 5 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறைகளிலும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. உள்ளாட்சி மற்றும் பொதுப்பணித்துறைக்கு ரூ.200 கோடிக்கு புதிய வேலைகள் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் நடக்கவுள்ளது.நகரப்பகுதியில் சாலையோரம் வசிப்பவர்களுக்கு 454 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. பணி முடிந்ததும், வீடுகள் ஒப்படைக்கப்படும். கிராமப்புற தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவச மனைப்பட்டா ஓரிரு மாதங்களில் வழங்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை