உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும் த.வெ.க., பொறுப்பாளர்கள் நியமனம்

புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும் த.வெ.க., பொறுப்பாளர்கள் நியமனம்

புதுச்சேரி: புதுச்சேரியில் 30 சட்டசபை தொகுதிக்கும் தமிழக வெற்றி கழகத்திற்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி துவங்கி உள்ளார். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை இலக்காக வைத்து களமிறங்கியுள்ள விஜய், ஆகஸ்ட் 22ம் தேதி கட்சியின் கொடி மற்றும் பாடலை அறிமுகம் செய்தார்.த.வெ.க., மாநாடு வரும் 27ம் தேதி புதுச்சேரி அடுத்த விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடக்கிறது. இதற்காக தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் தற்காலிக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று புதுச்சேரியின் 30 சட்டசபை தொகுதிக்குள் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தொகுதிக்கும் ஏழு பொறுப்பாளர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் மாநாட்டிற்கு வருபவர்களை அழைத்துவந்து அழைத்து செல்லவும், அவர்களுக்கு தேவையான அடிப்படை விஷயங்களை செய்துகொடுக்கவும் இந்த பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து கட்சியின் பொது செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என' குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி