உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

புதுச்சேரி; சாரம் எஸ்.ஆர்.எஸ்., அரசு உயர்நிலைப்பள்ளி பொதுத்தேர்வில் அதிக மதிப் பெண் பெற்ற மாணவர்களுக்கு, முன்னாள் மாணவர்கள் சார்பாக கலெக்டர் குலோத்துங்கன் ஊக்கத்தொகை வழங்கினார்.சாரம் எஸ்.ஆர்.எஸ்., அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் மாணவர்களுக்கு, பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பாக, ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி, இந்தாண்டு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.நிகழ்ச்சிக்கு கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கி, பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள் இளந்திரையன், சந்தோஷ், சரண் ஆகியோருக்கு முறையே 10 ஆயிரம், 7 ஆயிரம், 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.தலைமை ஆசிரியர் பத்மாவதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி