உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கோர்ட் வளாகத்தில் சுதந்திர தின விழா

கோர்ட் வளாகத்தில் சுதந்திர தின விழா

புதுச்சேரி: புதுச்சேரி ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் 79 வது சுதந்திர தின விழா நேற்று நடந்தது. தலைமை நீதிபதி ஆனந்த் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். நுகர்வோர் மாவட்ட நீதிமன்ற தலைவர் முத்துவேல் உட்பட அனைத்து நீதிபதிகள் முன்னிலை வகித்தனர். இதில், புதுச்சேரி வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் ரமேஷ், பொதுச் செயலாளர் நாராயண குமார், பொருளாளர் ராஜபிரகாஷ், அரசு வழக்கறிஞர்கள் ரவீந்திரன், ரங்கநாதன், எல்லப்பன், ராஜு, குமரேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ