உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுயேச்சை எம்.எல்.ஏ., நேரு புதுக்கட்சி துவக்கம்

சுயேச்சை எம்.எல்.ஏ., நேரு புதுக்கட்சி துவக்கம்

புதுச்சேரி: சுயேச்சை எம்.எல்.ஏ., நேரு புதுக்கட்சி ஆரம்பித்துள்ளார். இன்று கட்சி கொடியை அறிமுகப்படுத்தி வைக்கிறார். உருளையன்பேட்டை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்ற நேரு எம்.எல்.ஏ.,. ஆளும் என்.ஆர்.காங்., கட்சிக்கு ஆதரவு அளித்து வந்தார். இருப்பினும், நடுநிலையாக எதிர்க்கட்சிபோல் மக்கள் பிரச்னையில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தார். குறிப்பாக, பொதுநல அமைப்புகளை திரட்டி மாநில அந்தஸ்து கேட்டு டில்லியிலும் போராட்டம் நடத்தி கவனம் ஈர்த்தார். இதுபோன்ற சூழ்நிலையில் நேரு எம்.எல்.ஏ., 'நமது மக்கள் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பிக்க இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். புதுச்சேரி அண்ணாசாலையில் உள்ள அபிராமி டெசிடென்சியில் இன்று 27ம் தேதி மாலை 4:00 மணிக்கு தன்னுடைய கட்சியை கொடியை அறிமுகப்படுத்தி வைக்கிறார். இந்த கட்சி கொடியில் மேல் - கீழ் சிவப்பு வண்ணமும், நடுவில் வெள்ளை வண்ணமும் இடம் பெற்றுள்ளது. கொடியின் நடுவில் உள்ள வெள்ளையில் புதுச்சேரி மண்டபம், ஐந்து நட்சத்திர வளைவுடன் தமிழிலும், ஆங்கிலத்திலும் இடம் பெற்றுள்ளது. மா நில வளர்ச்சி மீது ஆர்வம் கொண்டவர்களை ஒருங்கிணைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்நாள் - முந்நாள் எம்.எல்.ஏ.,க்கள், முக்கிய அரசியல் பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை