மேலும் செய்திகள்
ரூ.45 லட்சத்திற்கு பருத்தி விற்பனை
09-Jul-2025
காரைக்கால்: காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் நடந்தது. பருத்தி ஏலத்தில் காரைக்கால் பகுதியை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தியினை விற்பனை கொண்டுவந்தனர். இதில் சுமார் 100 குவிண்டால் (10 டன்) எடைகொண்ட தரமான பருத்தி பஞ்சு ஏலம் போனது. இந்த வாரம் குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.7469 (ஒரு கிலோ ரூ.74.69) குறைந்தபட்ச விலையாக ரூ.7289-க்கு (ஒரு கிலோ ரூ.72.89) ஏலம் போனது. சராசரி விலையாக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7384-க்கு (ஒரு கிலோ ரூ.73.84) வியாபாரிகளால் ஏலம் எடுக்கப்பட்டது. இந்த மறைமுக ஏலம் வாரம் தோறும் சனிக்கிழமையில் நடைபெற இருப்பதால் பருத்தி விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அதிக லாபம் பெற்று பயனடையுமாறு விற்பனைக்குழு செயலாளர் செந்தில்குமார் கேட்டுக்கொண்டுள்ளளார்.
09-Jul-2025