உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வில்லியனுாரில் இண்டோர் ஸ்டேடியம் எம்.எல்.ஏ., அதிகாரிகளுடன் பார்வை

வில்லியனுாரில் இண்டோர் ஸ்டேடியம் எம்.எல்.ஏ., அதிகாரிகளுடன் பார்வை

வில்லியனுார்: வில்லியனுார் தொகுதியில் இண்டோர் ஸ்டேடியம் அமைப்பதற்கான இடத்தை எம்.எல்.ஏ., அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். வில்லியனுார் தொகுதியில் இளைஞர்களை நல்வழிப்படுத்தும் வகையிலும், விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் இண்டோர் ஸ்டேடியம் அமைக்க வேண்டும் என, சட்டசபை கூட்டத்தில்  ரவிக்குமார் எம்.எல்.ஏ., கோரிக்கை வைத்தார்.  கூட்டத்தொடர் முடிந்த நிலையில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை வரவழைத்து, வில்லியனுார் தொகுதிக்கு உட்பட்ட தில்லைநகர் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் இண்டோர் ஸ்டேடியம் அமைப்பதற்கான இடங்களை  நேற்று ஆய்வு செய்தார். இளைஞர்கள் விளையாட்டுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் இண்டோர் ஸ்டேடியத்தில்  ஏற்படுத்த வேண்டும். இதற்கான பணிகளை தாமதமின்றி மேற்கொண்டு, விரைவில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என, அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ., வலியுறுத்தினார். விளையாட்டுத் துறை துணை இயக்குநர் வைத்தியநாதன், வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் பிரபாகரன் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை