மேலும் செய்திகள்
அண்ணா பல்கலைக்கு வெடிகுண்டு மிரட்டல்
04-Jan-2025
புதுச்சேரி: காலப்பட்டு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் போலீஸ் உயர் அதிகாரி நியமிக்க வேண்டுமென, புதுச்சேரி மாநில மாணவர், பெற்றோர் நலச்சங்க தலைவர் பாலா வலியுறுத்தியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:காலாப்பட்டு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில், கடந்த 11ம் தேதி அத்துமீறி நுழைந்த நபர்கள் வடமாநில மாணவியிடம் தகராறு செய்தனர். புகாரின் பேரில் காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்தனர்.இந்த தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நிரந்தர ஊழியர்கள் நியமனம், பாதுகாப்பில் குறைப்பாடுகள் காணப்படுகிறது. எனவே புதுச்சேரி பல்லைக்கழகத்தை போல் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்திலும் பாதுகாப்பு கருதி போலீஸ் உயர் அதிகாரியை நியமிக்க வேண்டும். தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கல்வி மேம்பாட்டிற்காக அதிகமாக நிதிகள் ஒதுக்கப்படுகின்றன. ஆனால் அந்த நிதியை முறையாக செலவிடப்படுவதில்லை. இதனால் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
04-Jan-2025