மேலும் செய்திகள்
படைவீரர்கள் நலவாரிய செயலருக்கு நினைவு பரிசு
06-Aug-2025
புதுச்சேரி : விளையாட்டு வீரர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையினை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என புதுச்சேரி மாநில விளையாட்டு வீரர்கள் நலச்சங்கம் தலைவர் கராத்தே வளவன் வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை: ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29ம் தேதி, விளையாட்டு துறைகளில் பல்வேறு சாதனைகள் புரிந்து, இந்தியாவிற்கு பெருமை சேர்த்த முன்னாள் இந்திய ஆக்கி அணி கேப்டன் மேஜர் தயான் சந்துவின், பிறந்த தினத்தை தேசிய விளையாட்டு தினமாக அரசு கடைபிடிக்க வேண்டும். புதுச்சேரி அரசு மற்றும் விளையாட்டுத் துறை இணைந்து தேசிய விளையாட்டு தின விழா கொண்டாட அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும், விளையாட்டு சங்கங்களுக்கும் முறையாக அழைப்பு விடுத்து, விளையாட்டு திருவிழாவை உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு அரங்கத்தில் நடத்துவதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை உதவித்தொகை, ஊக்கத்தொகை ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண் டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
06-Aug-2025