இன்ஸ்பெக்டர்,எஸ்.ஐ., பணியிடமாற்றம்
புதுச்சேரி: புதுச்சேரியில், இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் பாதுகாப்பு அதிகாரியாகவும், கிருமாம்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் ஏனாம் கடலோர காவல் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை போலீஸ் தலைமையக எஸ்.பி., மோகன்குமார் பிறப்பித்துள்ளார்.