மேலும் செய்திகள்
ரூ.15 லட்சம் மோசடி புகார் மாஜி எம்.எல்.ஏ., மீது வழக்கு
1 hour(s) ago
அமெரிக்கா கைவினை கண்காட்சி புதுச்சேரி கலைஞர் பங்கேற்பு
3 hour(s) ago
2ம் நாளாக ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு
3 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரியில் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு 112 மையங்களில் நேற்று துவங்கியது. புதுச்சேரி அரசு துறைகளில் உள்ள யூ.டி.சி., உட்பட 327 பணியிடங்களை நிரப்ப ஒங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு அறிவிக்கப்பட்டது. இந்த தேர்விற்காக, புதுச்சேரி, காரைக்காலில் 112 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இத்தேர்வு நேற்று துவங்கியது. காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரை புள்ளியல் ஆய்வாளர் தேர்வும், மதியம் 12:30 மணி முதல் 2:30 நுாலக தகவல் உதவியாளர் தேர்வும், மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை கள மேற்பார்வையாளர் தேர்வும் நடந்தது. தேர்வு அறைக்குள் மின்னணு சாதனங்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை. தேர்வு மையங்களில், மொபைல் பயன்பாட்டை கண்டறிய, ஜாமர் கருவி பொருத்தப்பட்டிருந்தது. இன்று (22ம் தேதி) வேளாண்மை சார்ந்த பணிக்கும், தொழில்நுட்ப அலுவலர் பணிக்கும் தேர்வு நடக்கிறது. அதனை தொடர்ந்து, நாளை (23ம் தேதி) 8 பதவிகளுக்கான முதல்நிலை தேர்வும், யூ.டி.சி., பணிக்கு 2ம் தாள் தேர்வு நடக்கிறது.
1 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago