உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வில்லியனுாரில் தீவிர டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு

வில்லியனுாரில் தீவிர டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு

புதுச்சேரி: வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மணவெளியில் தீவர டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. புதுச்சேரி நலவழித்துறை தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்டம், வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் தீவிர டெங்கு ஒழிப்பு மணவெளி அன்னை தெரேசா நகரில் நடந்தது. தலைமை மருத்துவ அதிகாரி பாமகள் கவிதை வழிகாட்டுதல்படி சுகாதார ஆய்வாளர் இளையதாசன் தலைமையில் சுகாதார உதவி ஆய்வாளர்கள் அய்யனார், ரவிச்சந்திரன், திருமலை, சுதர்சன், கலையரசி முன்னிலையில் ராமச்சந்திரா பாரா மெடிக்கல் கல்வி நிறுவன மாணவிகள், ஆஷா பணியாளர்கள், துாய்மை பணியாளர்கள் இணைந்து அப்பகுதியில் உள்ள வீடுகளில் டெங்கு களப்பணி மேற்கொண்டனர். அதில், வீடுகளை சுற்றியுள்ள பகுதியில் உள்ள தேவையற்ற பிளாஸ்டிக் பொருள்கள், டயர், பானை, உரல், தேங்காய் குடுவை போன்றவற்றை கண்டறிந்து அப்புறப்படுத்தினர். மேலும், தேவையான தண்ணீர் பானையை மூடி வைக்கவும், தேவையற்ற பொருட்களை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். தண்ணீர் தொட்டியை மூடி வைக்கவும், அலங்கார பூஞ்சாடிகளில் தண்ணீரை வாரம் ஒரு முறை மாற்ற வேண்டுமென பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பொது மக்களுக்கு டெங்கு கொசுக்கள் பரவாமல் தடுக்கும் வழிமுறைகள், டெங்கு நோயின் அறிகுறி குறித்தும், விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !