உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஒதியம்பட்டில் தீவிர டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

ஒதியம்பட்டில் தீவிர டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

புதுச்சேரி: ஒதியம்பட்டு கிராமத்தில், தீவிர டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. புதுச்சேரி நலவழித்துறை, தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்டம், வில்லியனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து ஆகியவை இணைந்து, வில்லியனுார் அடுத்த ஒதியம்பட்டு கே.வி. நகரில் தீவிர டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முகாமினை நடத்தியது. முகாமுக்கு, தலைமை மருத்துவ அதிகாரி பாமகள் கவிதை தலைமை தாங்கினார்.  சுகாதார உதவி ஆய்வாளர்கள் அய்யனார், ரவிச்சந்திரன், திருமலை, சுதர்சன், கலையரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமச்சந்திரா பாரா மெடிக்கல் கல்வி நிறுவன மாணவிகள்,  ஆஷா பணியாளர்கள், துாய்மை பணியாளர்கள் ஆகியோர் ஒதியம்பட்டு கே.வி. நகரில் உள்ள வீடுகளில் சுற்றியுள்ள பகுதியில் உள்ள தேவையற்ற பிளாஸ்டிக் பொருள்கள், டயர், பானை, உரல், தேங்காய் குடுவை போன்றவற்றை கண்டறிந்து வீட்டு  உரிமையாளர் வைத்து அப்புறப்படுத்தினர். மேலும், டெங்கு கொசு உற்பதியாவதை தடுப்பதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி