உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இந்தியப் பயன்முறை உளவியல் சங்க பன்னாட்டு மாநாடு 2ம் தேதி துவக்கம்

இந்தியப் பயன்முறை உளவியல் சங்க பன்னாட்டு மாநாடு 2ம் தேதி துவக்கம்

புதுச்சேரி : புதுச்சேரி பல்கலை.,யில் நடக்கும்இந்திய பயன்முறை உளவியல் சங்க பன்னாட்டு மாநாட்டில், கவர்னர், முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.புதுச்சேரி பல்கலை மாளவியா மிஷன் ஆசிரியர் பயிற்சி மையத்தின் வாயிலாக, இந்தியப் பயன்முறை உளவியல் சங்கத்தின், 28வது பன்னாட்டு மாநாடு வரும் பிப்., 2ம் தேதி துவங்குகிறது.இதில் ஆய்வுக் கட்டுரைகளை வழங்குதல், நிபுணர்களின் தற்போதைய தேவைகள், மாநாட்டை வளப்படுத்த பல்வேறு கருப்பொருள்கள் மற்றும் துணை கருப்பொருள்களின் ஆராய்ச்சி முடிவுகள் அடிப்படையில் ஆய்வு அமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.இந்த அமர்வுகளின் போது வழங்க, 446 ஆய்வுக் கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இதில் கவர்னர் தமிழிசை, பங்கேற்று பேசுகிறார். முதல்வர் ரங்கசாமி மாநாட்டை துவக்கி வைக்கிறார். சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்று பேசுகின்றனர்.பொறுப்பு துணைவேந்தர் தரணிக்கரசு தலைமை தாங்குகிறார். உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த துணைவேந்தர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் சிறப்புரையாற்ற உள்ளனர். மூன்று நாட்கள் நடக்கும் மாநாடு 4ம் தேதி நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ