அஞ்சலக கோட்டத்தில் சர்வதேச யோகா தினம்
புதுச்சேரி : பாண்டிச்சேரி அஞ்சலக கோட்டத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, யோகாசன நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, முதுநிலை அஞ்சலகங்களின் கோட்ட கண்காணிப்பாளர் இனக்கொல்லு காவியா முன்னிலை வகித்தார். யோகா மாஸ்டர் பொன் கமலநாதன் வழிகாட்டுதலோடு, அஞ்சலக ஊழியர்கள் திரளாக பங்கேற்று யோகாசனம் செய்தனர்.தொடர்ந்து, யோகாசனத்தின் நன்மைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், அஞ்சலங்களின் துணை கண்காணிப்பாளர் பிரபுசங்கர், உதவி கண்காணிப்பாளர்கள் பிரவீன், வினோத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.