உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பா.ம.க., மண்டல நிர்வாகிகள் அறிமுகம் 

 பா.ம.க., மண்டல நிர்வாகிகள் அறிமுகம் 

புதுச்சேரி: புதுச்சேரி மாநில பா.ம.க. , மண்டல நிர்வாகிகள் அறிமுக கூட்டம், கவுண்டன்பாளையம் வன்னியர் சங்க அலுவலகத்தில் நடந்தது. மாநிலத் துணைத் தலைவர் சத்யா, கிழக்கு மண்டல அமைப்பாளர் கோபாலகிருஷ்ணன், வடக்கு மண்டல அமைப்பாளர் வடிவேல், மேற்கு மண்டல அமைப்பாளர் மதியழகன் தலைமை தாங்கினர். கூட்டத்தில், மாநில மகளிரணி தலைவர் வெர்ஜின்யா, மாநில இளைஞரணி தலைவர் சேகர், கிழக்கு மண்டல துணை அமைப்பாளர் முருகன், பாண்டியராஜன், சரவணன், ஜானகிராமன், கதிரேசன், பாண்டுரங்கன், பாண்டிதுரை, தொகுதி தலைவர்கள் முனுசாமி, சந்தோஷ் குமார், கவுதம், சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், சட்டசபை தேர்தல் நெருங்குவதால், தொகுதி வாரியாக கூட்டங்கள் நடத்தி கட்சியை வலுப்படுத்துவது, கட்சி நிர்வாகிகள் ஒற்றுமையாக செயல்பட்டு, பா.ம.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், முதலியார்பேட்டையில் வரும் 17ம் தேதி நடக்கும் கிழக்கு மண்டல அலுவலக திறப்பு விழாவில், அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை