இரும்பு கிரில் பாலம் சீரமைப்பு பணி
புதுச்சேரி : சாரம், தென்றல் நகரில் சேதமடைந்த வாய்க்கால் இரும்பு கிரில் பாலம் சீரமைக்கும் பணி நடந்தது.காமராஜர் நகர் தொகுதி சாரம், தென்றல் நகர் பகுதியில் வடிகால் வாய்கால் மேல் அமைக்கப்பட்டிருந்த இரும்பு கிரில் பாலம் 2 மாதங்களுக்கு முன் சேதமடைந்தது. அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சிவபிரகாசம் நேற்று நேரில் பார்வையிட்டதைத் தொடர்ந்து, ஊழியர்கள் மூலம் சேதமடைந்த இரும்பு கிரில் பாலத்தை சீரமைக்கும் பணி நடந்தது. காங்., பொறுப்பாளர் தேவதாஸ் உடனிருந்தார்.