கண்ணாடி கம்பெனியில் இரும்பு அச்சுகள் திருட்டு
புதுச்சேரி: வில்லியனுார் அடுத்த தொண்டமாநத்தத்தில் உள்ள தனியார் கண்ணாடி கம்பெனியில், கடந்த 26ம் தேதி சிலர் நுழைந்து, இரும்பு அச்சுகளை திருடிச் சென்றனர். கம்பெனி பொருட்களை ஆய்வு செய்ததில், 264 கிலோ எடை உள்ள 13 இரும்பு அச்சுகள் திருடு போயிருந்தது. கம்பெனியின் சீனியர் மேலாளர் சீனிவாசன் புகாரின் பேரில், சேதராப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.