உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இரும்பு குழாய்கள் திருட்டு பம்பை ஆற்றில் திக்... திக்...

இரும்பு குழாய்கள் திருட்டு பம்பை ஆற்றில் திக்... திக்...

திருபுவனை தொகுதி, சிலுக்காரிப்பாளையம் கிராமத்திற்கும், தமிழகத்தை சேர்ந்த குமளம் கிராமத்திற்கும் இடையே பம்பை ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில், சிலுக்காரிபாளையம் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று 25 ஆண்டிற்கு முன் தடுப்பணை கட்டப்பட்டது.வடக்கு - தெற்காக அமைந்த தடுப்பணையின் குறுக்கே இருபுறமும் இரும்பு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் தடுப்பணை பகுதியில் அமர்ந்து மது குடிக்கும் சமூக விரோதிகள் சிலர் கான்கிரீட் தடுப்புக் கட்டைகளை உடைத்து, அதில் உள்ள இரும்பு குழாய்களை திருடிச் சென்றுள்ளனர்.இதனால், நடைமேம்பாலத்தில் இரவு நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் தவறி தடுப்பணையில் விழும் அபாயம் நிலவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி