உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மாண்புமிகுவிற்கு செய்வினையா? நம்பூதிரியை வைத்து சிறப்பு பூஜை

 மாண்புமிகுவிற்கு செய்வினையா? நம்பூதிரியை வைத்து சிறப்பு பூஜை

திடீர் உடல் சுகவீனம் அடைந்ததால், புதுச்சேரியின் பிரதான மாண்புமிகு, கேரளா நம்பூதிரியை வைத்து பூஜை செய்ததால் சுகம் அடைந்தார் என, தகவல் வெளியாகி உள்ளது. புதுச்சேரியில் விளையாட்டு, ஆன்மிகம், அரசியல், அலுவலகம் என 'படு பிஸியாக' இயங்கி வந்த பிரதான மாண்புமிகு'விற்கு சில வாரங்களுக்கு முன் திடீரென உடல் சுகவீனம் ஏற்பட்டு, அவதிப்பட்டார். இதனைக் கண்ட அவரது நலம் விரும்பிகள் உடனடியாக கேரளா நம்பூதிரியை அழைத்து வந்து சிறப்பு பூஜைகள் செய்தனர். அப்போது, நம்பூதிரி மூத்த மாண்புமிகுக்கு யாரோ வேண்டாதவர்கள் 'செய்வினை' வைத்துள்ளனர். அதனை எடுத்து விட்டேன். இனி எந்த தொல்லையும் அவருக்கு வராது, எனக்கூறி மை ஒன்றை கொடுத்து அதனை புருவத்தில் தேய்த்துக் கொள்ள செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவருக்கு ஏற்பட்ட உடல் சுகவீனம் சரியானதால் அவரது நலம் விரும்பிகள் சந்தோஷமடைந்து நம்பூதிரியை சிறப்பாக கவனித்து அனுப்பிய தகவல் புதுச்சேரியில் உலா வருகிறது. இந்த விஞ்ஞான காலத்திலும் இதுபோன்ற சடங்குகள் குறித்து மூத்த மாண்புமிகுகளே நம்புவதை என்ன சொல்வது...


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை