உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெண் குழந்தைகளுக்கான வைப்பு நிதி புத்தகம் வழங்கல்

பெண் குழந்தைகளுக்கான வைப்பு நிதி புத்தகம் வழங்கல்

புதுச்சேரி : ராஜ்பவன் தொகுதி பெண் குழந்தைகளுக் கா ன பாதுகாப்பு வைப்பு நிதி வங்கி புத்தகத்தை அமைச்சர் லட்சுமி நாராயணன் பயனாளிகளுக்கு வழங்கினார். புதுச்சேரியில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு நிதி வைப்பு திட்டத்தின் கீழ் குழந்தையின் வங்கி கணக்கில் ரூ. 50 ஆயிரம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ராஜ்பவன் தொகுதியில் பிறந்த 26 பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு நிதி திட்டத்தின் கீழ், ரூ.50 ஆயிரம் வைப்பு நிதிக்கான வங்கி புத்தகம் மற்றும் சான்றிதழ்களை அமைச்சர் லட்சுமிநாராயணன் பயனாளிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை துணை இயக் குநர் ஜெயப்பிரியா, நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை