உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஓட்டுப்போட தேவையான ஆவணங்கள் வெளியீடு

ஓட்டுப்போட தேவையான ஆவணங்கள் வெளியீடு

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில், வாக்காளர்கள் ஓட்டு போட தேவையான ஆவணங்களை அறிவிக்கப்பட்டுள்ளன. தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில், வாக்காளர்கள் ஓட்டு போட , முக்கிய ஆவணமாக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இருக்கும். எனினும் தேர்தல் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கீழ்கண்ட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வாக்குச்சாவடியில் காண்பிக்கலாம். ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணி அட்டை, வங்கி, அஞ்சலகத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய கணக்குப் புத்தகங்கள். தொழிலாளர் அமைச்சகத்தின் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை, ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டை, ஓட்டுநர் உரிமம். பான் கார்டு, என்.பி.ஆர்.,ன் கீழ் இந்தியப் பதிவாளர் ஜெனரலால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம். மத்திய, மாநில அரசு, பொதுத் துறை நிறுவனங்கள், பொதுப் பங்கு நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்கு வழங்கிய புகைப்படத்துடன் கூடிய பணியாளர் அடையாள அட்டைகள். எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ., எம்.எல்.சி., ஆகியோர்களுக்கு வழங்கப்பட்ட தனித்துவ அடையாள அட்டைகள். மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட தனித்துவ மாற்றுத்திறனாளி அடையாள அட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை