உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஜெ., பிறந்த நாள் விழா முதல்வர் மரியாதை

ஜெ., பிறந்த நாள் விழா முதல்வர் மரியாதை

புதுச்சேரி : புதுச்சேரி அரசு சார்பில், மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.புதுச்சேரி சட்டசபை வளாகத்தில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு, முதல்வர் ரங்கசாமி மலர் துாவி மரியாதை செலுத்தினர். சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், சட்டசபை துணைத் தலைவர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், ரமேஷ், பிரகாஷ்குமார் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

அ.தி.மு.க.,

அதேபோல, உப்பளத்தில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், ஜெ., படத்திற்கு, மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில், நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். முத்தியால்பேட்டையில், மாநில துணை செய லாளர் வையாபுரி மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ