புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஜன் ஜாதியா கவுரவ் திவாஸ் விழா
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகம், மானுடவியல் துறை மற்றும் மாணவர் நலன் இயக்குநரகம் சார்பில், இந்தியாவின் பழங்குடியின சமூகங்களின் பண்பாட்டு செல்வம்,வரலாற்று பாரம்பரியம் வெளிப்படுத்தும் விதமாக, 'ஜன் ஜாதியா கவுரவ் திவாஸ் 2025' விழா நடந்தது. பல்கலைக்கழக கருத்தரங்க கூடத்தில் நடந்த விழாவிற்கு, துணை வேந்தர் பிரகாஷ்பாபு தலைமை தாங்கினார். மாணவர் நலன் இயக்குனரக தலைவர் வெங்கட்டராவ், சமூக அறவியல் மற்றும் சர்வதேச ஆய்வு பள்ளி தலைவர் சந்திரமவுலி, ஒடிசா சாம்பல்பூர் பல்கலைக்கழக முன்னாள் மானுடவியல் துறை தலைவர் பிரேமானந்த பாண்டா ஆகியோர் பழங்குடியின பாரம்பரியம், அடையாள உறுதி, மற்றும் இன்றைய காலத்தில் பழங்குடியின சமூகங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பேசினர். தொடர்ந்து பழங்குடியின பாரம்பரிய நாட்டுப்புற போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மானுடவியல் துறை தலைவர் வாலரீ தகார், ஒருங்கிணைப்பு குழு ஜெசுரத்தம் தேவாரப்பள்ளி, ராஜேஷ் குருராஜ் குந்தர்கி ஆகியோர் செய்திருந்தனர்.