மேலும் செய்திகள்
முத்தரையர் பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை
14-May-2025
புதுச்சேரி : தொண்டமாநத்தம் ஜெயபாலகோகுலம் வித்யாலயா பள்ளி மாணவர்கள் பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளனர்.பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். பிளஸ் தேர்வில் மாணவர் பிரியதர்ஷன் 600க்கு 574 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். மாணவி சக்தி 556, மாணவர் நிகிலன் 521 மதிப்பெண்கள் பெற்று முறையே இரண்டு மற்றும் மூன்றாமிடம் பிடித்தனர்.பள்ளி நிர்வாகி சந்திரசேகரன் கூறுகையில், 'எமது பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளனர். எமது பள்ளி, 2025-26ல் 25வது கல்வியாண்டு வெள்ளி விழாவில் அடியெடுத்து வைக்கிறது.அதனை கொண்டாடும் வகையில், பள்ளியில் எல்.கே.ஜி., முதல் 9ம் வகுப்பு வரை சேரும் மாணவர்களுக்கு தலா ரூ.5,000 கட்டண சலுகை அளிக்கப்படும். பிளஸ் 1 சேரும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் அடிப்படையில் சிறப்பு கட்டண சலுகை அளிக்கப்படும்' என்றார்.
14-May-2025