ஜே.சி.எம்., மக்கள் மன்ற அலுவலகம் திறப்பு
திருபுவனை : புதுச்சேரி ஜே.சி.எம்., மக்கள் மன்றத்தின் திருபுவனை தொகுதி அலுவலகம் திறப்பு விழா மதகடிப்பட்டில் நடந்தது. விழாவிற்கு வருகை தந்த ஜே.சி.எம்., மக்கள் மன்ற நிறுவன தலைவர் ஜோஸ்சார்லஸ் மார்ட்டின், தலைவர் ரீகன்ஜான்குமார் ஆகியோருக்கு அங்காளன் எம்.எல்.ஏ., தலைமையில் தொகுதி நிர்வாகிகள் திருபுவனை ஏரிக்கரையில் இருந்து பைக்கில் ஊர்வலமாக அழைத்து வந்தனர். மதகடிப்பட்டில் திறப்பு விழா அலுவலகம் அருகில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுக்கு, வரவேற்பு அளித்தனர். அலுவலகம் திறப்பு விழாவிற்கு தொகுதி எம்.எல்.ஏ., அங்காளன் தலைமை தாங்கினார். ஜே.சி.எம்., மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார், திருபுவனை தொகுதி தலைவர் ரவிக்குமார், பொதுச்செயலாளர் வடிவேல், துணை தலைவர்கள் அருள்மணி, தனசேகரன், பொருளாளர் கண்ணன், அமைப்பாளர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜே.சி.எம்., மக்கள் மன்ற நிறுவன தலைவர் ஜோஸ்சார்லஸ் மார்ட்டின் அலுவலகத்தை திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். விழாவில் ஆலோசகர் முருகையன், தொகுதி துணை பொதுச்செயலாளர்கள் அரிஜெயசங்கர், பாலமுருகன், இணை பொதுச்செயலாளர்கள் சேசவன், சத்தியசீலன், துணை அமைப்பாளர் கலியுகராணி, பிரணவன் உள்பட பலர் கலந்துகொண்டனர். பின், திருபுவனை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் 1.5 டன் திறன்கொண்ட ஏ.சி., வழங்கினார்.