கோவிலில் நகைகள் திருட்டு
திருபுவனை: நல்லுார் பஞ்சாத்தம்மன் கோவில் பூட்டை உடைத்து, ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். திருபுவனை அடுத்த நல்லுார் பஞ்சாத்தம்மன் கோவில் திருவிழா கடந்த 3 மாதங்களுக்கு முன் நடந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம ஆசாமிகள் கோவிலில் இரும்பு கேட்டில் பூட்டியிருந்த இரண்டு பூட்டுகளை உடைத்து, மூலவர் அம்மன் மற்றும் உற்சவர்கழுத்தில் இருந்த தங்கநகைகளை திருடிச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.60 ஆயிரம் ஆகும். இது குறித்து கனியமுதன் கொடுத்த புகாரின்பேரில் திருபுவனை போலீசார் வழக்குப் பதிவு செய்து, நகைகளை திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.