உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  நகை செய்யும் தொழிலாளி சாவு

 நகை செய்யும் தொழிலாளி சாவு

புதுச்சேரி: வீட்டின் கழிவறையில் வழுக்கி விழுந்த நகை செய்யும் தொழிலாளி இறந்தார். சாரம், தென்றல் நகரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, 63; நகைச் செய்யும் தொழிலாளி. குடிப்பழக்கம் உடைய இவர், கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த 18ம் தேதி வீட்டின் கழிவறையில்வழுக்கி விழுந்து தலையில் படுகாயம் அடைந்த சுந்தரமூர்த்தியை குடும்பத்தினர் மீட்டு, ஜிப்மரில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். புகாரின் பேரில் டி.நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ