ஜிப்மர் வெளிப்புற சிகிச்சை பிரிவு நாளை மறுநாள் இயங்காது
புதுச்சேரி: குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு நாளை மறுநாள் (24ம் தேதி) ஜிப்மரில் வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்காது என, அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜிப்மர் மக்கள் தொடர்பு அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு மத்திய அரசு விடுமுறை தினமான நாளை மறுநாள் 24ம் தேதி) ஜிப்மர் வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்காது. எனவே வெளிப்புற நோயாளிகள் நாளை சிகிச்சைக்கு வருவதை தவிர்க்கவும். எனினும் அவசர சிகிச்சை பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.