கபடி போட்டி பரிசளிப்பு
திருபுவனை: முன்னாள் எம்.எல்.ஏ., கோபிகா பிறந்த நாள் விழாவையொட்டி, திருபுவனை தொகுதி, சன்னியாசிக்குப்பத்தில் கபடி போட்டி பரிசளிப்பு விழா நடந்தது. இப்போட்டியில் 40க்கும் மேற்பட்ட ஆடவர் அணியினர் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., கோபிகா தலைமை தாங்கி, பரிசு வழங்கி, பேசினார். விழாவில் என்.ஆர் காங்., திருபுவனை தொகுதி தலைவர் ராஜா, பொதுசெயலாளர் பாலு, இளைஞர் அணி மாநில செயலாளர் ராஜா, சமூக ஆர்வலர் ஜனார்த்தனன், சிவராமன், இளைஞர் அணி தொகுதி தலைவர் பிரசாந்த், பொதுச்செயலாளர் ராஜேஷ், துணைத் தலைவர் அய்யனார், இளைஞர் அணி மாவட்ட பொருளாளர் பெருமாள், தொகுதி இணைச் செயலாளர் இளம்பருதி, தொண்டர் அணி ஷர்மிளன், தொகுதி செயலாளர் அய்யப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.