உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடுவனுார் கோவில் கும்பாபிஷேகம்

கடுவனுார் கோவில் கும்பாபிஷேகம்

பாகூர் : கடுவனுாரில் முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.பாகூர் அடுத்துள்ள கடுவனுாரில் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த 6ம் தேதி விக்னேஷ்வர பூஜை, கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. 7ம் தேதி அஷ்டபந்தனம், முதல் காலயாக பூஜை நடந்தது. 8ம் தேதி இரண்டாம் காலயாக பூஜையும், 7.30 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது.அதனை தொடர்ந்து, 8.00 மணிக்கு மூலவர் கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ