காலாப்பட்டு நவோதயா பள்ளியில் சேர்க்கை காலக்கெடு நீட்டிப்பு
புதுச்சேரி : புதுச்சேரி நவோதயா வித்யாலயாவில் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் சேருவதற்கு ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்க கால கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.இது குறித்து நவோதயா பள்ளி முதல்வர் கண்ணதாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;புதுச்சேரி, பெரியகாலாப்பட்டில் மத்திய அரசு கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் ஜவகர் நவோதயா வித்யாலயாவில் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் காலி இடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் தெரிவுநிலை தேர்வின் அடிப்படையில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்வதற்கான கடைசி தேதி வரும் நவ., 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுவரை விண்ணப்பிககாதவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளு மாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க மற்றும் கூடுதல் விவரங்களுக்கும் https://cbseitms.nic.in/2024/nvsix/ & https://cbseitms.nic.in/2024/nvsxi 11/. என்ற இணையதளங்களை அணுகவும்.