உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / துாண்டில் முள் வளைவு அமைப்பு கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., ஆய்வு

துாண்டில் முள் வளைவு அமைப்பு கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., ஆய்வு

புதுச்சேரி : பெரிய காலாப்பட்டில் கடல் அரிப்பை தடுக்க நடைபெற்று வரும் துாண்டில் முள் வளைவு பணியை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., நேற்று ஆய்வு செய்தார். காலாப்பட்டு தொகுதியில், பெரிய காலாப்பட்டு, சின்ன காலாப்பட்டு, பிள்ளைச்சாவடி, கனகசெட்டிக்குளம் கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்க கடந்த 2024ம் ஆண்டு பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவு கோட்டம் மூலம் ரூ.26 கோடி மதிப்பில் கடலில் 150 மீட்டர் இடைவெளியில் துாண்டில் முள் வளைவு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி, மந்தமாகவும், தரமின்றியும் நடைபெற்று வருவதாக மீனவர்கள் அளித்த புகாரை தொடர்ந்து கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவு உதவி பொறியாளர் செல்வராஜ் மற்றும் அதிகாரிகளுடன் பெரியகாலாப்பட்டு கடற்கரையில் நடைபெற்று வரும் துாண்டில் முள் வளைவு அமைக்கும் பணியை நேற்று ஆய்வு செய்தார். அதில், பருவநிலை மாற்றம் காரணமாக கடல் அரிப்பு அதிகரித்து வருவதால், துாண்டில் வளைவு அமைக்கும் பணியை விரைந்து முடிக்கவும், துாண்டில் முள் வளைவில் பெரிய கற்களை கொண்டு அமைக்கவும், பணியை அதிகாரிகள் தினசரி ஆய்வு செய்து தரமாக அமைக்க அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி