உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காரைக்கால் கிரைம் செய்திகள்

காரைக்கால் கிரைம் செய்திகள்

பஸ் நிலையத்தில் ஆண் சடலம்

காரைக்கால்; திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகா, பாவட்டக்குடி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன், 61; விவசாய தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. கடந்த 19ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற நாகராஜன் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று முன்தினம் நெடுங்காடு அன்னவாசல் சாலையில் உள்ள பஸ் நிலையத்தில் நாகராஜன் இறந்து கிடந்தார். நெடுங்காடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ஐ.டி., நிறுவன ஊழியர் சாவு

காரைக்கால்: காஞ்சிபுரம் மாவட்டம், பதுவஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன், 50; சென்னை ஐ.டி., நிறுவனத்தில் கிராபிக் டிசைனராக வேலை செய்து வந்தார்.இவரது மனைவி சுதாலட்சுமி. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மது அருந்தும் பழக்கத்தால் வேலை இழந்த ஜெயராமனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதனால், அவர் அம்பகரத்துார், மாரியம்மன் கோவில் திடல் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் அவரது வீட்டில் படுக்கையில் ஜெயராமன் இறந்து கிடந்தார். அம்பகரத்துார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ஆபாசமாக பேசிய நபர் கைது

காரைக்கால்; காரைக்கால் நகர பகுதியில் நேற்று முன்தினம் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். நகராட்சி சந்தை திடல் அருகில் மது போதையில் பொது மக்களை ஆபாசமாக பேசிய திருநள்ளாறு, தெற்கு வட்டச்சாலையைச் சேர்ந்த மணிகண்டன், 34, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

பழைய கட்டடத்தில் முதியவர் சடலம்

காரைக்கால்: தருமபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் மோகன். இவர், நேற்று காலை ஞானபிர காசம் வீதியில் உள்ள தேநீர் கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது எதிரே இருந்த பழைய கட்டடத்தில் துர்நாற்றம் வீசியது. அங்கு சென்று பார்த்தபோது, 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்து காரைக்கால் நகர போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

கடையில் குட்கா பறிமுதல்

உரிமையாளர் மீது வழக்கு

காரைக்கால், திருநள்ளாறு மெயின் ரோட்டில் உள்ள பிரியதர்ஷினி சைக்கிள் பழுதுபார்க்கும் கடையில் புகையிலை பொருட்கள் விற்பதாக திருநள்ளாறு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஹான்ஸ், கூல்லீப், விமல், பான் மசாலா உள்ளிட்ட பல்வேறு வகையான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து கடை உரிமையாளர் திருநள்ளாறு கார்த்திகேசன், 52, மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

போதை தகராறு: 2 பேர் கைது

காரைக்கால்; கோட்டுச்சேரி போலீசார் நேற்று ரோந்து சென்றனர். பாரதியார் மெயின் ரோட்டில் உள்ள உதயம் சூப்பர் மார்க்கெட் அருகே மது போதையி ல் பொதுமக்களை ஆபாசமாக பேசிய கீழகாசாக்குடி தெற்குத் தெருவைச் சேர்ந்த செல்வம் மகன் சுசீந்திரன், 23, என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். திருப்பட்டினம் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். போலகம் பழைய பிரவிடையான் பாலம் அருகே, மது போதையில் ரகளையில் ஈடுபட்ட நாகப்பட்டினம், செல்லுார் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த சரவணன் மகன் நிவாஷ், 23, மீது போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி