உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காரைக்கால் கிரைம் செய்திகள்

காரைக்கால் கிரைம் செய்திகள்

வேன் மோதி காயம்: காரைக்கால்; நெடுங்காடு, காமராஜர் சாலையைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை ஊழியர் தமிழரசன், 62. கடந்த 22ம் தேதி காரைக்கால் பி.ஆர்.டி.சி., அலுவலகத்திற்கு சென்று விட்டு தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஜிப்மர் ரவுண்டானா சந்திப்பில் வந்த தனியார் பள்ளி வேன் பைக் மீது மோதியது. படுகாயமடைந்த தமிழரசன் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து ஏற்படுத்திய வேன் டிரைவர் மேலையூர் தினகரன் 22 மீது காரைக்கால் போக்குவரத்து நகர காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். போதை வாலிபர் கைது: அம்பகரத்துார் பகுதியில் நேற்று முன்தினம் திருநள்ளாறு சப் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ் ரோந்து சென்றார். அம்பகரத்துார் ரயில் நிலையம் அருகே மதுபோதையில் ஆபாசமாக பேசிய அதே பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் விக்னேஸ்வரன், 19, என்பவர் மீது திருநள்ளாறு போலீசார் கைது செய்தனர். மீது வழக்கு பதிவு: மேலகாசாகுடி, நெடுங்காடு பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன், 35. இவர், நேற்று முன்தினம் அப்பகுதியில் நடந்த இறுதி ஊர்வலத்தில் சென்றபோது அதே பகுதியை சேர்ந்த வேலாயுதம், 38, என்பவர் மணிவண்ணனை ஆபாசமாக பேசினார். இருவருக்கு தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த வேலாயுதம் மணிவண்ணனை தாக்கினார். மணிவண்ணன் அளித்த புகாரின் பேரில், வேலாயுதம் மீது நெடுங்காடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். ரூ. 94 ஆயிரம் ‘குட்கா’ பறிமுதல்: காரைக்கால், திருநள்ளார் சாலையில் உள்ள பெட்டிக்கடையில் புகையிலைப் பொருட்கள் விற்பதாக நகர போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் நேற்று அங்கு சென்று கடையில் சோதனை செய்தனர். கடையில் 94 ஆயிரத்து 250 ரூபாய் மதிப்பிலான பல்வேறு வகையான புகையிலை மற்றும் பான் மசாலா பாக்கெட்டுகள் மற்றும் 3 லட்சத்து 16 ஆயிரத்து 900 ரொக்கப் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து கடை உரிமையாளர் ராமச்சந்திரன், 62, என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ