உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சட்டசபையை பார்வையிட்ட காரைக்கால் மாணவர்கள் 

சட்டசபையை பார்வையிட்ட காரைக்கால் மாணவர்கள் 

புதுச்சேரி: கல்வி சுற்றுலாவாக புதுச்சேரி வந்த காரைக்கால் மாணவர்களை சட்ட சபை அரங்கை பார்வையிட சபாநாயகர் செல்வம் அழைத்து சென்று கலந்துரையாடினார்.காரைக்கால் மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள், கல்வி சுற்றுலாவாக புதுச்சேரிக்கு நேற்று வந்திருந்தனர். சட்டசபை வளாகத்திற்கு வந்திருந்த மாணவர்கள், புதுச்சேரி சட்டசபை அரங்கை பார்வையிட விரும்பினர். இதையடுத்து, சபாநாயகர் செல்வம், மாணவர்களை அழைத்து சென்று, சட்டசபை பார்வையாளர் மாடத்தில் அமர வைத்து, அரங்கை பார்வையிட அனுமதி அளித்ததுடன், மாணவர்களுடன் கலந்துரையாடினார்.இதில், அமைச்சர் திருமுருகன், ராமலிங்கம் எம்.எல்.ஏ., சட்டசபை செயலர் தயாளன் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி