உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாநில கால்பந்து போட்டி காரைக்கால் அணி வெற்றி

மாநில கால்பந்து போட்டி காரைக்கால் அணி வெற்றி

அரியாங்குப்பம்: மாநில அளவிலான கால்பந்து, போட்டியில், காரைக்காலை சேர்ந்த, டால்பின் அணி முதலிடத்தை பிடித்தது.பூரணாங்குப்பம் கிங் ஸ்டார் கால்பந்து கழகம் சார்பில், மூன்றாம் ஆண்டு, மாநில அளவிலான கால்பந்து போட்டி, தவளக்குப்பம், அரசு மேல்நிலைப்பள்ளி, விளையாட்டு மைதானத்தில், நடந்தது. இரண்டு நாட்கள் நடந்த போட்டியில், புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளில் இருந்து 23 அணிகள் பங்கேற்றன. இதில், காரைக்கால் டால்பின் அணி முதலிடத்தையும், பூரணாங்குப்பம் கிங்ஸ்டார் அணி இரண்டாமிடத்தையும், கோரிமேடு பிளே மேக்கர்ஸ் அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தது. அதில், முதல் பரிசாக, 20 ஆயிரம், இரண்டாம் பரிசாக, 15 ஆயிரம், மூன்றாம் பரிசாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.முதல் மூன்று இடங்களை பிடித்த அணிகளுக்கு, சிறப்பு விருந்தினராக, பங்கேற்ற சபாநாயகர் செல்வம் பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில், கிங் ஸ்டார் கால்பந்து கழக தலைவர் நந்தகோபால், செயலாளர் வடிவேல் உட்பட நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை