புதுக்குப்பம் கடற்கரையில் கரலாக்கட்டை சுழற்றும் நிகழ்வு
அரியாங்குப்பம்: புதுக்குப்பம் கடற்கரையில், ஜோதி சிலம்பம் சத்ரிய குருகுலத்தில், பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள், கரலாக்கட்டை சுழற்றும் நிகழ்ச்சி நடந்தது.தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தில், ஜோதி சிலம்பம் சத்ரிய குருலத்தில் கரலாக்கட்டை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதில், மாணவ, மாணவிகள், இளைஞர்கள் உள்ளிட்ட பலர் அங்கு பயிற்சி பெற்று வருகின்றனர். உலக கரலாக்கட்டை தினத்தையொட்டி, நேற்று, புதுக்குப்பம் கடற்கரை கரையில், குருகுலத்தின் நிறுவனர், செந்தில் கண்ணன் தலைமையில், உலக சாதனைக்காக, 300க்கும் மேற்பட்டவர்கள், ஒரு மணி நேரம் தொடர்ந்து, கரலாக்கட்டை சுழற்றும் நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக சபாநாயகர் செல்வம், பங்கேற்று, கரலாக்கட்டையை சுழற்றினார். அதனை தொடர்ந்து, குருகுலத்தில் நடந்த நிகழ்ச்சியில், பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.