உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கராத்தே பயிற்சி முகாம்

கராத்தே பயிற்சி முகாம்

புதுச்சேரி: புதுச்சேரி செயின்ட் பேட்ரிக் பள்ளியில் இரண்டு நாள் கராத்தே பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு சர்வதேச நடுவர் ஜோதிமணி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக இன்ஸ்பெக்டர் இனியன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். கோஜூரியூ காரத்தே சங்க பொதுச் செயலாளர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். மூத்த கராத்தே பயிற்சியாளர்கள் கண்ணன், ஜவஹர், முத்துகுமார், சுனித்தா பிரியதர்ஷினி, கார்குழலி, பிரனவ், நவனீத் ஆகியோர் பயிற்சி அளித்தனர். ஏற்பாடுகளை உடற்கல்வி விரிவுரையாளர்கள் ஜோதிமணி செய்திருந்தார். பள்ளி விரிவுரையாளர் நடராஜன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை