உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் கார்த்திகை தீப விழா

பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் கார்த்திகை தீப விழா

புதுச்சேரி: புதுச்சேரி– திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், இரும்பை டோல்கேட் அருகே பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், கார்த்திகை மாத பவுர்ணமி தீப பெருவிழா இன்று (நவ.,24) நடந்தது. இதையொட்டி, காலை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. முக்கிய நிகழ்வாக, மாலை 6:00 மணிக்கு பாலா திரிபுரசுந்தரி அம்பாள், ராஜமாதங்கி, வாராகி, பைரவர் புறப்பாடு, மகாதீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, பவுர்ணமி பூஜை, தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் டிரஸ்ட் செய்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !