உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகிச்சை

அரசு மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகிச்சை

புதுச்சேரி: இந்திரா காந்தி அரசு மருத் துவமனையில், சிறுநீரக தான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.புதுச்சேரி இந்திரகா காந்தி அரசு மருத்துவமனைக்கு 38 வயது பெண் ஒருவர், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு வந்தார். அவரை பரிசோதனை செய்ததில், சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என, மருத்துவர்கள் கூறினர். பாதிக்கப்பட்டவரின் தாய், தனது சிறுநீரகத்தை தானம் செய்தார்.அந்த பெண்ணுக்கு, சிறுநீரியல் துறைத் தலைவர் சுதாகர் தலைமையில், மருத்துவக் குழுவினர் லேப்ராஸ்கோபி கருவி மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, சிறிய துளை மூலம் சிறுநீரகத்தை அகற்றி அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்தனர்.இதுகுறித்து, மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள் கூறுகையில், 'சிறுநீரக தான அறுவை சிகிச்சை செய்த பின், வலி குறைவாக இருக்கும். குறுகிய காலம் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பது, குறைந்தபட்ச காய தழும்பு இருக்கும். விரைவாக குணமடைந்து, நோயாளி வீட்டு செல்லலாம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை