உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளியில் மழலையர்கள் உலக சாதனை முயற்சி

 பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளியில் மழலையர்கள் உலக சாதனை முயற்சி

புதுச்சேரி: மூலக்குளம், பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளியில் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற எல்.கே.ஜி., - யு.கே.ஜி., மழலையர்கள் முயற்சி மேற்கொண்டனர். சிறப்பு விருந்தினராக புதுச்சேரி, 'தினமலர்' வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன், கவுரவ விருந்தினராக தாசில்தார் மணிகண்டன் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களை பள்ளி முதல்வர் பாஸ்கல் ராஜ் வரவேற்று கவுரவித்தார். தொடர்ந்து பள்ளியை சேர்ந்த 12 மழலையர்கள், உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்கான முயற்சியை மேற்கொண்டனர். அதில், ஜோயல் மார்வெலஸ், பைபிளின் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில் உள்ள 66 புத்தகங்களின் பெயர்களை 44.59 வினாடிகளிலும், ஸ்ரீஜித், ஆங்கிலத்தில் 100 முன்னிடைச் சொற்களை 44.14 வினாடிகளிலும், சாருலட்சுமி, நுாறு தொழில்களின் பெயர்களை 86.68 வினாடிகளிலும், ரீகன், 100 சொற்றொடர் வினைச் சொற்களை 52.14 வினாடிகளிலும், யோகித், 50 விசைப்பலகை குறுக்கு வழிகளை 98.32 வினாடிகளில் கூறினார். கிருஷ்ணிகா, 50 அணைகளின் பெயரை 84.18 வினாடிகளிலும், ஸ்ரீ விக்ரமன் 50 தேசிய தலைவர்களின் பெயர்களை 90 வினாடிகளிலும், யோகன் போபன் அன்பு 1 முதல் 10 வரையிலான எண்களை 10 மொழிகளில் 32.19 வினாடிகளில் கூறினர். லித்திக் 60 எதிர்ச்சொற்களுக்கு 57.65 வினாடிகளில் பதில் அளித்தார். டேவிட் 50 டிஸ்னி கதாபாத்திரங்களின் பெயர்களை 38.76 வினாடிகளில் அடையாளம் காட்டினார். ரோமன் ராஜ் சதுரங்கப் பலகையில் சதுரங்க காய்களை 70.17 வினாடிகளில் அமைத்தார். ஜெஸ்மிதா, 100 ரோமன் எண்களை 5 நிமிடம் 20 வினாடிகளில் எழுதினார். சர்வதேச சாதனை புத்தகத்தில் இடம்பெற முயற்சித்த மழலையர்களை, புதுச்சேரி, தினமலர் வெளியீட்டாளர். கி.வெங்கட்ராமன் பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவத்து வாழ்த்தினார். தொடர்ந்து, சாதனை முயற்சி மேற்கொண்ட மழலையர்களை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை