காமாட்சி அம்மன் கோவிலில் நாளை கிண்ணி தேர்
புதுச்சேரி: புதுச்சேரி, காமாட்சி அம்மன் கோவிலில், சித்திரை மாத பவுர்ணமியை முன்னிட்டு, கிண்ணி தேர் ஆராதனை மகா உற்சவம் நாளை நடக்கிறது. புதுச்சேரி, பாரதி வீதியில் காமாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், சித்திரை மாத கிண்ணி ரத பிரம்மோற்சவ விழா கடந்த 3ம் தேதி துவங்கியது. இதையொட்டி, தினமும் காலையில் அம்மனுக்கு அபிேஷகம், மாலையில் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.நேற்று காலை 8:00 மணிக்கு காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், இரவு 7:00 மணிக்கு இந்திர விமானத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வாக, வரும் 11ம் தேதி காலை 7:30 மணிக்கு 108 பால்குடம் மாடவீதி வழியாக கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு அபிேஷகம் செய்யப்படுகிறது. இரவு 7:00 மணிக்கு காமாட்சி அம்மனுக்கு விசேஷ சந்தனகாப்பு அலங்காரம், காமாட்சி அம்மன் அலங்கரிக்கப்பட்ட கிண்ணி தேர் வீதியுலா நடக்கிறது.