மேலும் செய்திகள்
கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
14-Oct-2024
பாகூர்: பாகூர் பங்களா வீதியைச் சேர்ந்தவர் பாலாஜி 26; தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் இரவு பாகூரில் உள்ள மதுக்கடையில் மது அருந்து கொண்டிருந்தார்.அப்போது, அங்கு வந்த அவரது நண்பர் சுரேஷிடம் பேசி உள்ளார். இதனிடையே, அங்கிருந்த பாகூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த அரவிந்த் என்பவர், சுரேஷிடம் பேச்சு கொடுத்துள்ளார். அப்போது, பாலாஜி, 5 நிமிடம் காத்திருங்கள் நான் சுரேஷிடம் பேசிவிட்டு போய் விடுகிறேன் என்று அரவிந்திடம் கூறியுள்ளார்.இதனால், ஆத்திரமடைந்த அரவிந்த் தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாலாஜியை தலை மற்றும் முகத்தில் வெட்டியுள்ளார். தடுக்க வந்த அதே பகுதியை சேர்ந்த வினோத்குமார், அவரது நண்பரான பாலசுப்ரமணி ஆகியோரையும் அரவிந்த் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்த தப்பிச் சென்றார். இதில், படுகாயம் அடைந்த மூன்று பேரும், புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.பாலாஜி கொடுத்த புகாரின் பேரில், பாகூர் சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குப் பதிந்து தப்பி ஓடிய அரவிந்தை தேடி வருகின்றார்.
14-Oct-2024