உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரூ. 62 லட்சம் ஆன்லைன் மோசடி கொல்கத்தா ஆசாமி கைது

ரூ. 62 லட்சம் ஆன்லைன் மோசடி கொல்கத்தா ஆசாமி கைது

புதுச்சேரி: காரைக்காலை சேர்ந்த ஒருவரை, வாட்ஸ் ஆப்பில் தொடர்பு கொண்ட நபர், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்றார். அதனை நம்பி, அந்த நபர் 62.95 லட்சம் ரூபாய் முதலீடு செய்த நிலையில் ஏமாற்றப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அதில், மோசடி பணத்தில் 21 லட்சம் ரூபாய் மேற்கு வங்கம், பரத்புர் முரஷிதாபாத் பகுதியைச் சேர்ந்த சுவப்பான் குமார்கோஷ் மகன் சந்துகோஷ், 24; என்பவரது வங்கி கணக்கில் சென்றது தெரியவந்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார் மேற்கு வங்காளம் சென்று விசாரித்தனர். அதில், சந்துகோஷின் தந்தையான ஆயுர்வேத மருத்துவர் சுவப்பான்குமார் கோஷ், 50; என்பவர் இந்த மோசடியில் தொடர்பில் இருப்பது தெரி யவந்தது. அதன்பேரில், சுவப்பான்குமார் கோஷை கைது செய்த போலீசார், அவரை நேற்று முன்தினம் புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், 2.5 கோடி ரூபாய் பண பரிமாற்றம் நடந்துள்ள வங்கி கணக்கின் உரிமையாளர் சந்துகோஷ் மற்றும் மோசடியில் தொடர்பில் உள்ளவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை