மேலும் செய்திகள்
கபடி போட்டி: பரிசளிப்பு விழா
02-Oct-2025
புதுச்சேரி: பள்ளிக் கல்வித்துறை சார்பில், நான்காம் வட்ட பள்ளிகளுக்கு இடையிலான ஹாக்கிப் போட்டி, கூடப்பாக்கம் அண்ணாமலை ரெட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இப்போட்டியில், நான்காம் வட்டத்தை சேர்ந்த 25 பள்ளிகள் பங்கேற்றன. மாணவர் மற்றும் மாணவி இருபிரிவிலும் கூடப்பாக்கம் அண்ணாமலை ரெட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளி முதல் பரிசினை வென்றது. போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் செந்தில் செய்திருந்தார். தொடர்ந்து, நடந்த பரிசளிப்பு விழாவிற்கு, ஒருங்கிணைப்பு செயலர் ரகு வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் பாக்கியலட்சுமி தலைமையில் பரிசு வழங்கப்பட்டது.
02-Oct-2025