மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
26-Jan-2025
கடலுார்:' திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் கும்பாபபிஷேகம், பிப்., 2ம் தேதி நடக்கிறது. கடலுார் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் 108 வைணவ தளங்களில் முதன்மை பெற்றதாகும். இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 2012ம் ஆண்டு நடந்தது. தற்போது 12 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், 2023ல் திருப்பணிக துவங்கியது. பணிகள் முடிந்த நிலையில், கும்பாபிஷேகம் வரும் பிப்., 2ம் தேதி காலை 9:30 மணி முதல் 10:30 மணிக்குள் நடக்கிறது. அதையொட்டி, நாளை (29ம் தேதி) யாகசாலை பூஜை துவங்குகிறது. பிப்., 2ம் தேதி காலை விஸ்வரூப தரிசனம், ஹோமம், பிரதான மகா பூர்ணாஹூதி நடந்து, கும்பம் புறப்பாடு ஊர்வலமாக சென்று கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனை தொடர்ந்து வேத, திவ்ய பிரபந்த சாற்று முறை, பிரம்ம கோஷம் நடந்து பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இரவு தங்க விசேஷ வாகனத்தில் தேவநாதசுவாமி உபய நாச்சியாருடன் வீதியுலா நடக்கிறது.
26-Jan-2025