உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புயலால் பாதித்த பள்ளிக்கு ஆய்வக கருவிகள் வழங்கல்

புயலால் பாதித்த பள்ளிக்கு ஆய்வக கருவிகள் வழங்கல்

புதுச்சேரி: மழையால் சேதம் அடைந்த பள்ளி அறிவியல் ஆய்வுக் கூடத்தை என்.ஆர்.காங்., பிரமுகர் நாராயணசாமி கேசவன்சொந்த செலவில் சரிசெய்து கொடுத்தார்.உழவர்கரை சட்டசபை தொகுதிக்குட்பட்ட அரசு நிதியுதவி பெறும் செயின்ட் ஜோசப் உயர் நிலைப் பள்ளி கடும் மழை மற்றும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டது.பள்ளியை சரி செய்ய வேண்டும் என பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை அறிந்த உழவர்கரை என்.ஆர்.காங்., பிரமுகர் நாராயணசாமி கேசவன் பள்ளியை ஆய்வு செய்தார்.பள்ளியின் அறிவியல் தொழில்நுட்ப ஆய்வக சேதத்தை சரிசெய்து புதிய ஆய்வக அறிவியல் தொழில்நுட்ப கருவிகள் மற்றும் உபகரணங்கள் தன் சொந்த செலவில் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை